Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விரைவில் அருந்ததி

விரைவில் அருந்ததி
, சனி, 28 பிப்ரவரி 2009 (14:14 IST)
அனுஷ்கா நடித்த அருந்ததி ஆந்திராவில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. உபசாரத்துக்கு சொல்லும் வார்த்தையில்லை. உண்மையிலேயே பட்டையைதான் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

கோடி ராமகிருஷ்ணா இயக்கிய இப்படம் இதுவரை 45 கோடிகள் வசூலித்துள்ளது. சிரஞ்சீவியின் ஸ்டாலின் படம் வசூலித்ததைவிட இது அதிகம். அருந்ததியின் வெற்றியைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் ஆந்திர ஹீரோக்கள். ஹீரோயின் ஓ‌ரியண்ட் சப்ஜெக்டுக்கு இத்தனை பெ‌ரிய வெற்றியா?

விரைவில் இந்தப் படம் தமிழுக்கு வருகிறது. தெலுங்கு தயா‌ரிப்பாளரே படத்தை தமிழிலும் வெளியிடுவதாக இருந்தார். ஆனால், இங்குள்ளவர்களே பெரும் தொகைக்கு படத்தை வாங்க முன்வந்ததால் படத்தை கைமாற்றியிருக்கிறார்.

அருந்ததியின் தமிழ் உ‌ரிமையை வாங்கியிருப்பவர் தயா‌ரிப்பாளர் ராம. நாராயணன். மகாதேவி என்ற பெய‌ரில் படத்தை வெளியிட நினைத்தவர் தற்போது தனது முடிவை மாற்றியிருக்கிறா‌ர். படம் அருந்ததி என்ற பெய‌ரிலியே வெளிவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil