காதலில் கோட்டை கட்டிய அகத்தியன் அடுத்து எடுத்ததெல்லாம் சுமார் படங்கள். திரைக்கதைக்காக தேசிய விருது பெற்றவரை இன்று தேடினாலும் காண முடியவில்லை. சினிமாவில் தேவை திறமையல்ல, வெற்றி. இதற்கு வாழும் சாட்சி அகத்தியன்.
பழங்கதைகளை விடுவோம். அகத்தியன் மீண்டும் படம் இயக்குகிறார். திறமையான இயக்குனர்களை தேடிப் பிடித்து வாய்ப்பளிக்கும் பிரகாஷ்ராஜ் அகத்தியனின் இரண்டாம் வருகைக்கு பாதை அமைத்திருக்கிறார். இவரது டூயட் மூவிஸ் தயாரிக்கும் அடுத்தப் படத்தை அகத்தியன் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
டூயட் மூவிஸின் இனிது இனிது ஒரு ஷெட்யூலுடன் செட்டில் ஒதுங்கிய நிலையில், அடுத்தப் படத்தை பிரகாஷ்ராஜ் எப்படி எடுப்பார் என்ற நியாயமான கேள்வியும் எழுந்துள்ளது.
எப்படியோ... அகத்தியனின் இரண்டாம் வருகைக்கு நமது வார்ம் வெல்கம்.