பொங்கலுக்கு வெளியான மூன்று படங்களில் காதல்னா சும்மா இல்ல மட்டும் விமர்சகர்களால் பரவாயில்லை பாராட்டை பெற்றிருக்கிறது. வில்லு, படிக்காதவன் இரண்டும் எந்தவிதத்திலும் ஆச்சரியத்தை தூண்டாத வழக்கமான கமர்ஷியல் படங்கள். இதில் படிக்காதவனுக்கே ரசிகர்கள் கூட்டம் அதிகம். பிரபலமான நடிகர்கள் இல்லாததால் காதல்னா சும்மா இல்ல சுமாரான வசூலையே பெற்றுள்ளது.
1. படிக்காதவன்
சுராஜின் இந்தப் படம் கமர்ஷியலாக வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஐந்து தினங்களில் முக்கால் கோடியை சென்னையில் மட்டும் வசூலித்திருப்பது படிக்காதவனுக்கு முதலிடத்தை பெற்றுத் தந்திருக்கிறது.
2. வில்லு
வில்லுக்கு இரண்டாவது இடம். சென்னையில் இதுவரை ஒரு கோடி வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வாரம் நாற்பத்து மூன்று லட்சங்கள் வசூலித்தது. நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வில்லுவின் பாக்ஸ் ஆஃபிஸ் தோல்வியை உறுதி செய்கிறது.
3. காதல்னா சும்மா இல்ல
பிரபலங்கள் இல்லாதது படத்தின் வசூலில் பிரதிபலிக்கிறது. இதுவரை பதிமூன்று லட்சங்கள் வசூலித்திருக்கிறது. விமர்சனங்கள் படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
4. அபியும் நானும்
நான்கு வார இறுதியில் ராதாமோகனின் படம் ஒரு கோடியை தாண்டியிருக்கிறது. சென்றவார வசூல், ஏறக்குறைய ஆறரை லட்சம். படம் above average.. வசூல் average.
5. அஆஇஈ
குடும்பப் பின்னணியில் அமைந்த இந்த காதல் படம் சென்றவார இறுதியில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் நாலரை லட்சம் வசூலித்துள்ளது. இதுவரை இதன் மொத்த வசூல் இருபது லட்சங்கள். சாதாரண படம்.. மிகச் சாதாரண வசூல்.