ஒரு கல்லூரியின் கதை படத்தை இயக்கிய நந்தா பெரியசாமி அடுத்து கரண் அரவாணியாக நடிக்கும் அர்த்தநாரி படத்தை இயக்கப் போவதாக கூறி வந்தார்.
மலையன், கந்தா, கனகவேல் காக்க என கால் டஜன் படங்களை முடிக்க வேண்டிய நிலையில் இருக்கும் கரண், இப்போதைக்கு அர்த்தநாரிக்கு அபயம் அளிக்கும் மூடில் இல்லை.
லேட்டாக இதனை புரிந்து கொண்ட நந்தா பெரியசாமி, நான்கு இளைஞர்களை வைத்து மாத்தி யோசி என்ற பெயரில் புதிய படமொன்றை தொடங்குகிறார். அம்முவாகிய நான் படத்தை தயாரித்த சேகர் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
நந்தா பெரியசாமி முன்பே மாத்தி யோசித்திருக்கலாம்.