Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அ‌‌ஜ்மலின் அர்ச்சனாவும் அர்ஜுனனும்

Advertiesment
அ‌‌ஜ்மலின் அர்ச்சனாவும் அர்ஜுனனும்
, செவ்வாய், 13 ஜனவரி 2009 (17:49 IST)
அஞ்சாதேயில் அறிமுகமான அ‌‌ஜ்மல் தநா 07 அல 4777 படத்திற்குப் பிறகு நந்தினி இயக்கும் படத்தில் நடிக்கிறார். ரொமாண்டிக் காமெடிப் படமான இதில் பெங்களூருவைச் சேர்ந்த மாடல் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

அ‌‌ஜ்மலின் சினிமா பாலிஸி வித்தியாசமானது. ஹீரோவே கதையாக இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் மத்தியில், கதை ஹீரோவாக இருக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்ற எண்ணம் கொண்டவர் இவர். இந்த எண்ணத்துக்கு இயைந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அ‌‌ஜ்மல்.

நந்தினி இயக்கும் படத்துக்கு அர்ச்சனாவும் அர்ஜுனனும் என பெயர் வைத்துள்ளனர். பெங்களூரு மாடல் பானு கதாநாயகியாக நடிக்கிறார். அர்ஜுன் என்று படத்தின் பெயர் இருந்தாலும் அடிதடி இல்லாத ரொமாண்டிக் காமெடியாம் இந்தப் படம்.

தநா 07 அல 4777 வெளியான பிறகு நந்தினியின் படத்தில் நடிக்கவுள்ளார் அ‌‌ஜ்மல்.

Share this Story:

Follow Webdunia tamil