தனது பிஸி ஷெட்யூல் காரணமாக பிரபல இந்திப்பட இயக்குனர்களின் படங்களுக்கே கால்ஷீட் கொடுக்காமல் டபாய்த்து வருகிறவர் ஷில்பா ஷெட்டி.
ஷில்பாவின் நெருங்கிய நண்பர் பிரபுதேவா தனது அடுத்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க கேட்டதற்கே நோ சொன்னவர். அப்படிப்பட்டவர் சென்னை வந்திருந்தார். அதுவும் ஒரு கடை திறப்பு விழாவுக்கு. கடையின் உரிமையாளர் தமிழ்நாட்டுக்கு நன்கு பரிச்சயமான நடிகை சோனா.
குசேலன் படத்துக்குப் பிறகு பிரபலங்களின் லிஸ்டில் இடம்பிடித்துவிட்ட சோனா, சைடு பிஸினஸாக அழகு சாதனங்கள் விற்பனை செய்யும் கடையொன்றை தொடங்கியிருக்கிறார். இதனை திறந்து வைக்கத்தான் ஷில்பா ஷெட்டி சென்னை வந்திருந்தார்.
திறப்பு விழாவுக்குப் பிறகு பேசிய அவர், தமிழ் சினிமாவில் நடிக்க ஆவலாக இருப்பதாகவும், ரஜினி, விக்ரம், விஜய் ஆகியோர் தனக்கு பிடித்தமான நடிகர்கள் என்றும் தெரிவித்தார்.
சீக்கிரமே உங்களை தமிழ்ப் படத்தில் எதிர்பார்க்கிறோம்.