மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு. வயதில் மூத்தவரும், அரசியலில் தூய்மையானவர் என்று எதிர்க்கட்சிகாளலும் பாராட்டு பெற்றவர்.
இவரின் வாழ்க்கை அரசியலுக்கு வர நினைக்கும் இளைஞர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காக அவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவுள்ளது மும்பையைச் சேர்ந்த சோயி கிரியேஷன்ஸ் எனும் நிறுவனம்.
இதற்காக படப்பிடிப்புக்கு ஏற்பாடுகளை செய்து வரும் இந்நிறுவனம் ஜோதிபாசு மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி முன்னணி தலைவர்களிடம் அனுமதி கேட்டு வருகின்றன. ஜோதிபாசு அவர்களின் வாழ்க்கையை திரைக்கதை, வசனம் எழுதி கட்சித் தலைவர்களுக்கு அனுப்பியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ரமேஷ் பிம்பிள்.
ஆங்கிலம் மற்றும் வங்காள மொழிகளில் எடுக்கப்படும் இப்படத்திற்காக லண்டன், கொல்கத்தா போன்ற இடங்களை தேர்வு செய்துள்ளனர். அனேகமாக வரும் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளனர்.
ஒரே விஷயம் என்னவென்றால் எளிமையான தலைவருக்கு பல கோடிகள் செலவு செய்து படம் எடுப்பது வருத்தப்பட வேண்டிய விஷயமாக சிலர் கருத்து கூறி வருகின்றனர்.