நடிகை தேவயானியின் தம்பி நகுலை வைத்து பி.வி. பிரசாத் இயக்கிய படம் காதலில் விழுந்தேன். நாக்கு முக்க பாடலுக்காகவே சன் பிக்சர்ஸ் வாங்கி அந்தப் பாடலை மட்டும் ரீ-ஷூட் செய்து வெளியிட்டது. அத்தோடு அரை மணிக்கு ஒருதரம் தனது டி.வி. சேனல்களில் விளம்பரம் செய்ய படம் நல்ல கலெக்சனை அள்ளியது.
நகுலுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தன. சம்பளமும் 75 லட்சமாக உயர்ந்தன. இந்த நிலையில் பி.வி. பிரகாஷ் நகுலை அணுகி அடுத்த படத்திற்கும் கால்ஷீட் கேட்டதோடு, இருபத்தைந்து லட்சம்தான் தரமுடியும், அதுவும் நான் கேட்கும் தேதிகளை ஒதுக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார்.
தன்னை இந்த அளவுக்கு கொண்டு வந்தவர் என்பதற்காக சம்பளத்திற்கு ஒத்துக்கொண்ட நகுல், தற்போது தேதியில்லை ஆறு மாதம் போகட்டும் என்று கூற, கடுப்பான பி.வி. பிரசாத், எனக்கே கால்ஷீட் இல்லையா, உன்னைப் போல நூறு பேரை என்னால் உருவாக்க முடியும் என்று ஆவேசமாக கூறிவிட்டு வந்தவர், தற்போது ஜெகதீஷ் என்ற புதுமுகத்தை வைத்து அடுத்தப் பட வேலைகளில் இறங்கிவிட்டார். நாளை ஜெகதீஷ¤ம் முரண்டு பிடிக்காமல் இருந்தால் சரிதான்.