Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆறாவது சென்னை சர்வதேச திரைப்பட விழா

Advertiesment
ஆறாவது சென்னை சர்வதேச திரைப்பட விழா
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:41 IST)
தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஒத்துழைப்புடன் ICAF (Indo Cine Appreciation Foundation) நடத்தும் ஆறாவது சென்னை திரைபபட விழா இன்று தொடங்கியது. கலைவாணர் அரங்கில் இன்று மாலை தமிழக முதல்வர் கருணாநிதி விழாவை தொடங்கி வைக்கிறார். தொடக்க விழா மாலையில் நடந்தாலும் இன்று காலையே படங்களின் திரையிடல் ஆரம்பமானது.

சென்னை உட்லண்ட்ஸ் சிம்பொனி மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலுள்ள திரையரங்கு ஆகிய மூன்று இடங்களில் படங்கள் திரையிடப்படுகின்றன.

இன்று காலை பிரான்ஸ், நார்வே பிலிப்பைன்ஸ், எகிப்து, செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

மாலை 6.15 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடக்கும் தொடக்க விழாவை தொடர்ந்து, கசகஸ்தான் இயக்குனர் Sergi Dvortsevoy இயக்கிய Tulpan தொடக்க விழா திரைப்படமாக திரையிடப்படுகிறது.

இன்றிலிருந்து பத்து தினங்கள் இந்த திரைப்பட விழா நடைபெற உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil