பருத்திவீரன், ஜில்லுன்னு ஒரு காதல் படங்களை தயாரித்த ஸ்டுடியோ கிரின் ஞானவேல் புதிதாக இரு படங்களை தயாரிக்கிறார். இதிலும் அண்ணன், தம்பி இருவருமே நடிக்கிறார்கள்.
முதல் படத்தில் நடிப்பது சூர்யா. படத்தை ஹரி இயக்குகிறார். ஏற்கனவே இவர்கள் காம்பினேஷனில் வெளிவந்த ஆறு, வேல் படங்கள் வெற்றி பெற்றது
இந்த கூட்டணி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்துக்கு சிங்கம் என பெயர் வைத்திருப்பதை சேவல் ஆடியோ வெளியீட்டின் போதே தெரிவித்திருந்தார், ஹரி.
ஸ்டுயோ கிரினின் அடுத்தப் படத்தில் கார்த்தி நடிக்கிறார். இதுவொரு தெலுங்கு ரீமேக். ஆந்திராவில் வெளியான விக்ரமாதித்துடு படத்தின் தமிழ் தழுவல். அனேகமாக இந்தப் படத்தை சுராஜ் இயக்கலாம். படத்துக்கு சிறுத்தை என பெயர் வைத்துள்ளனர். இதில் கார்த்திக்கு இரண்டு வேடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.