எஸ்.ஜே. சூர்யா போல் முழுநேர நடிகராகும் முடிவில் இருக்கிறார் தருண்கோபி.
விஷாலின் திமிரு, சிம்புவின் காளை படங்களை இயக்கிய இவர், தனது மதுரா டாக்கீஸ் சார்பில் காட்டுப்பய படத்தை தயாரித்து ஹீரோவாக நடிப்பதாக இருந்தார்.
அதற்குமுன் ராசுமதுரவனின் மாயாண்டி குடும்பத்தார் வாய்ப்பு கிடைக்கவே சொந்தப்பட முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
தற்போது மாயாண்டி குடும்பத்தார் படப்பிடிப்பு வத்தலகுண்டில் நடந்து வருகிறது. தருண்கோபி, ஹீரோயின் தமிழரசி, மணிவண்ணன் சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் ராசுமதுரவன் எடுத்து வருகிறார்.
முழுக்க கிராமப் பின்னணியில் இப்படம் தயாராகி வருகிறது.