எல்லாம் அவன் செயல் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. சினிமா சந்திப்பாக இருந்ததை சீரியஸ் அரசியல் சந்திப்பாக்கினார், வடிவேலு.
எல்லாம் அவன் செயலில் வக்கீலாக வரும் இவர், பிறகு அரசியல்வாதியாக மாறுவார். படம் குறித்து தனது பேச்சை தொடங்கியவர், திடீரென்று அரசியலுக்கு தாவினார். ‘நான் ஏற்கனவே கூறியதுபோல் சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுவேன்.’
தனது முன்னாள் சபதத்தை உறுதி செய்தவர், புதிதாக இன்னொரு சபதம் செய்து விஜயகாந்தின் அரசியல் எதிரிகளை குஷிப்படுத்தினார். ‘வருகிற நாடாளமன்ற தேர்தலில் விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன்’ என்றார் வடிவேலு.
விஜயகாந்தை எதிர்ப்பவர்களுக்கு இலவச பிரச்சார பீரங்கி தயார்.