செல்வா இயக்கத்தில் மாதவன், மம்தா மோகன்தாஸ் நடித்திருக்கும் குரு என் ஆளு கிறிஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளது.
இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த எஸ் பாஸ் படத்தின் ரீ-மேக்கே குரு என் ஆளு. மாதவனுடன் அப்பாஸ், ப்ருந்தா பரோக் ஆகியோரும் நடித்துள்ளனர். விவேக் முக்கியமான வேடத்தில் வருகிறார்.
தீபாவளிக்கே தயாராகிவிட்ட இப்படம் சில காரணங்களால் ரிலீஸாகாமல் தள்ளிப்போனது. பிரச்சனைகள் முடிந்த நிலையில் படத்தை கிறிஸ்துமஸ் அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர்.