இயக்குகிற படங்களில் எல்லாம் நடித்துவிடுகிறவர் பேரரசு. பழனியில் போலீஸ் அதிகாரியாக நடித்த இவர் திருவண்ணாமலை படத்திலும் சிறிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.
அர்ஜுன், பூஜா காந்தி நடித்திருக்கும் திருண்ணாமலையை கவிதாலயா தயாரித்துள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் அனைத்துப் பாடல்களையும் பேரரசுவே எழுதியுள்ளார். படத்தில் சாய்குமார், மீனாள் ஆகியோரும் நடித்துள்ளனர்.
அர்ஜுன் இதில் லோக்கல் கேபிள் டிவி நடத்துகிறவராக வருகிறார். பேரரசுவின் வேடம் பற்றி சொல்லவில்லையே. டாக்டர் வேடம் ஒன்று படத்தில் வருகிறதாம். வெள்ளை கோட் அணிந்து அவரே அதில் நடித்துள்ளார்.
டிசம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது.