சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கும் அயன் படத்தின் பாடல் கம்போஸிங் புதுச்சேரியில் நடந்து வருகிறது.
ஏவி.எம். தயாரிக்கும் இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கு இசையமைக்கிறார். கதை, வசனம் எழுத்தாளர்கள் சுபா.
சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்று மும்பையில் எடுக்கப்பட்டது. மும்பை டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்தார். சூர்யாவுடன் இந்தப் பாடலுக்கு மும்பை நடிகை கொய்னா மித்ரா நடனம் ஆடினார்.
தற்போது படத்தின் பிற பாடல்களுக்கான கம்போஸிங் புதுச்சேரியில் நடந்து வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ், கே.வி.ஆனந்த் இருவரும் கம்போஸிங் வேலையில் பிஸியாக உள்ளனர்.
ஆக்சன் படமான அயனுக்கு கனல் கண்ணன் சண்டைப் பயிற்சி அமைக்கிறார்.