சந்திரசேகரன் தயாரித்து பாதியில் நின்ற கில்லாடி படம் மீண்டும் டேக் ஆஃப் ஆகிறது.
வெங்கடேஷ் இயக்கும் இந்தப் படத்தில் பரத், நிலா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கியமான வேடத்தில் ரோஜா நடிக்கிறார். இந்தப் படத்தில் ரீ மிக்ஸ் ஒன்று இடம்பெறுகிறது.
இதற்காக அன்னக்கிளி படத்தில் இளையராஜா இசையில் பஞ்சு அருணாச்சலம் எழுதிய மச்சானை பார்த்தீங்களா பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் தேவா பாடலுக்கு இசையமைத்துள்ளார்.