Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிங்கள திரையுலகம் போட்டி உண்ணாவிரதம்!

Advertiesment
சிங்கள திரையுலகம் போட்டி உண்ணாவிரதம்!
, புதன், 7 ஜனவரி 2009 (21:17 IST)
இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழர்களுக்கு ஆதரவாகவும், இனப்படுகொலையை இலங்கை அரசு உடனே நிறுத்த வலியுறுத்தியும் தமிழ் திரையுலகினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்குப் போட்டியாக இன்று சிங்கள திரையுலகினர் இலங்கையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

இந்த உண்ணாவிரதத்திற்கு, இனப்படுகொலையை நடத்திவரும் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உதவியாளர் ஏற்பாடு செய்துள்ளார். சிங்கள திரையுலகினர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களுக்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கள திரைத்துறையில் தொழில்நுட்ப கலைஞர்களாக பெருமளவில் தமிழர்கள் உள்ள நிலையில், இந்த எச்சரிக்கை அவர்களுக்கு வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட நிர்ப்பந்தமாக கருதப்படுகிறது.

நடிகை பூஜா அஞ்சலிகா உள்பட சில சிங்கள படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நடிக்கவும் திட்டமிட்டுள்ளார். அவர் இனப்படுகொலைக்கு ஆதரவான சிங்கள திரையுலகினரின் போராட்டத்தில் கலந்து கொள்வாரா என்பது தமிழ்த் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil