Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழிக்குப் பழி திட்டுக்குத் திட்டு!

Advertiesment
பழிக்குப் பழி திட்டுக்குத் திட்டு!
, புதன், 7 ஜனவரி 2009 (20:57 IST)
தமிழ்நாட்டுக்கும் - கர்நாடகத்திற்கும் உள்ள காவிரி பிரச்சனை தீர்ந்தாலும் தீருமே தவிர, சிம்பு - நயன்தாரா பிரச்சனை தீரவே தீராது போல இருக்கிறது.

நயன்தாரா சும்மா இருந்தால் சிம்பு சீண்டுகிறார். சிம்பு சும்மா இருந்தால் நயன் சீண்டுகிறார்.

சமீபத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த நயன், சிம்பு எங்கே அமர்ந்திருக்கிறார்? எப்போது கிளம்புவார் என்றெல்லாம் கேள்வி கேட்டு, சிம்பு பார்க்காதவண்ணம் நடந்து கொண்டார்.

காரணம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக நடைபெற்ற ஆர்ப்பாட்ட மேடையில் சிம்புக்கு அருகே அமரும்படி ஆனதால் தவிர்க்க முடியாமல் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.

அதனால்தான் இப்படியெல்லாம் கேள்வி கேட்டு உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார் நயன்.

இதை கேள்விப்பட்ட சிம்பு, தற்போது சிலம்பாட்டம் படத்தில் நடிக்கும் தன் நாயகியான சனாகானை தூண்டிவிட்டு, நயன்தாரா எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்று பேசவை‌த்தா‌ர்.

கடுப்பான நயன்தாரா, அடுத்து சிம்புவை எப்படி பழிவாங்கலாம் என்று ஆலோசித்து வரு‌கிறார். ரூம் போட்டு யோசிப்பாங்களா, இல்லை அதுவா வருதான்னு தெரியலை!

Share this Story:

Follow Webdunia tamil