Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திரைப்பட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்!

Advertiesment
திரைப்பட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்!
, புதன், 7 ஜனவரி 2009 (20:34 IST)
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெ‌ப்‌ஸி) சார்பில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை தொடங்கியது.

சென்னை வடபழனியில் நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ராம. நாராயணன் தொடங்கி வைத்தார்.

சம்மேளனத்தின் 24 சங்கங்களின் உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள். இதன் காரணமாக இன்று காலையிலேயே உண்ணாவிரதம் நடைபெறும் மைதானம் நிரம்பி வழிந்தது.

மேலும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து திரைத்துறை உறுப்பினர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டத்துக்கு சம்மேளனத்தின் தலைவர் விஜயன் தலைமை வகிக்கிறார். இன்று சென்னை வரும் சீமான், அமீர் இருவரும் மதியத்திற்கு மேல் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு பேசயிருக்கிறார்கள்.

உண்ணாவிரதத்தையயாட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil