Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திரையுலகின் நான்காம்கட்ட போராட்டம்!

திரையுலகின் நான்காம்கட்ட போராட்டம்!
, புதன், 7 ஜனவரி 2009 (20:22 IST)
இலங்கை‌த் தமிழர் மீதான தாக்குதலை இலங்கை அரசு கைவிட வேண்டும், தமிழர்களுக்கு இந்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும், இலங்கைக்கு ராணுவ உதவியை நிறுத்த வேண்டும் என்பது போன்ற கோ‌ரிக்கைகளை வலியுறுத்தி திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வரும் 5ம் தே‌‌தி ஒரு நாள் உண்ணாவிரத‌ப் போராட்டத்தை நடத்துகிறது.

பெப்சி சார்பில் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் தொழிலாளர் கூட்டமைப்பை‌ச் சேர்ந்த 15 சங்கங்கள் கலந்து கொள்கின்றன.

வடபழனி அருணாசலம் சாலையில் இந்த உண்ணா‌விரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. உண்ணாவிரதத்தை தயா‌ரிப்பாளர்கள் சங்க‌த் தலைவர் ராம. நாராயணன் தொடங்கி வைக்கிறார்.

ஏற்கனவே திரையுலகினர் ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தினர். மனித சங்கிலி போராட்டத்திலும் கலந்து கொண்டனர். ஒன்றாம் தேதி நடிகர்கள் உண்ணாவிரத‌ப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர். அந்த வகையில் திரையுலகினர் நடத்தும் நான்காம்கட்ட போராட்டம் இது.

உண்ணாவிரதம் குறித்த தகவலை நேற்று பெப்சி தலைவர் விஜயன் நிருபர்களிடம் தெ‌ரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil