Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் பனோரமாவில் 4 தமிழ் பட‌ங்கள்!

இந்தியன் பனோரமாவில் 4 தமிழ் பட‌ங்கள்!
, புதன், 29 அக்டோபர் 2008 (13:32 IST)
சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் டிசம்பர் மாதம் நடக்கிறது. 104 திரைப்பட‌ங்களில் 25 திரைப்பட‌ங்கள் இதில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் நான்கு திரைப்பட‌ங்கள் தமிழ் பட‌ங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பில்லா, கல்லூ‌ரி, கா‌ஞ்சீவரம் மற்றும் முதல் முதல் முதல் வரை ஆகிய பட‌ங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் பில்லா, முதல் முதல் முதல் வரை ஆகியவை கமர்ஷியல் படப்பி‌ரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பில்லா ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பிரகாஷ்ரா‌ஜ் நடிப்பில் ப்‌ரியதர்ஷன் இயக்கியிருக்கும் கா‌ஞ்சீவரம் திரைப்படம் டொரண்டோ உள்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil