குருவை மிஞ்சிய சிஷ்யனுக்கு சரியான உதாரணம், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன். கனல் கண்ணன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்த பீட்டர் ஹெய்னின் வளர்ச்சி அபாரமானது.
ஷங்கரின் அந்நியன், சிவாஜி போன்ற பெரிய படங்களுக்கு இவர்தான் சண்டை காட்சிகளை அமைத்துக் கொடுத்தார். பாலிவுட்டிலும் இவர் பெயர் பிரபலம்.
தனியாக படம் பண்ணும் திட்டத்தில் இருக்கிறார் பீட்டர் ஹெய்ன். இதனால் பெரிய வாய்ப்புகள் பல வந்தும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் மணிரத்னத்தின் புதிய படத்துக்கு மட்டும் சண்டைக் காட்சிகள் அமைத்துக் கொடுக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இதற்காக கேரளாவின் சாலக்குடி சென்றுள்ள அவர், இந்தப் படத்துக்குப் பிறகு சொந்தப் படம் இயக்குவார் என கூறப்படுகிறது.