சுப்ரமணியபுரம் தமிழ் நாட்டில் நூறு நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் சொல்லும் சென்சுரி கேரளாவில்.
சுப்ரமணியபுரம் தமிழ்நாட்டில் வெளியாகி மூன்று வாரங்கள் கழித்து கேரளாவில் வெளியானது. மதுரை வட்டாரத்தை பிரதிபலித்த இந்தப் படத்துக்கு மலையாள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு.
திருவனந்தபுரத்தில் சசிகுமாரின் இந்தப் படம் ரசிகர்களின் ஆதரவுடன் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.
மலையாள சேனல்களில் வரும் இசை நிகழ்ச்சிகளில் இப்படத்தின் கண்களிரண்டால் பாடல் தவறாமல் இடம்பிடித்து வருகிறது. போக்கிரிக்குப் பிறகு கேரளாவில் அதிக ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.