ராமேஸ்வரம் பேரணி இன்னும் அதன் சூடு தணியாமல் வெவ்வேறு வடிவங்களில் பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறது.
சீமான், அமீர் பேச்சுக்கு பெயர் தெரியாத சில அரசியல் குட்டித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ரஜினி, கமல் இருவரையும் பகிரங்கமாக கண்டித்திருக்கிறார் பாரதிராஜா.
ஈழத் தமிழர்களின் ஆதரவில்தான் ரஜினி, கமல் இருவரின் படங்களும் வெளிநாடுகளில் ஓடுகின்றன. ராமேஸ்வரம் பேரணியில் இவர்கள் கலந்து கொள்ளாவிட்டாலும், ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்கலாம் என்று பகிரங்கமாகவே கண்டித்திருக்கிறார்.
ஒட்டுமொத்த நடிகர்களையும் பாரதிராஜா லெப்ட் அண்டு ரைட் வாங்கியிருக்கும் நிலையில் நவ. 1 நடக்கும் நடிகர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் அவருக்கெதிரான கண்டனத்திற்கு ஸ்கிரிப்ட் தயாராகி வருகிறதாம்.