Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆந்திராவில் ரசிகர்கள் அதிகம் - சூர்யா!

Advertiesment
ஆந்திராவில் ரசிகர்கள் அதிகம் - சூர்யா!
கொடுத்த வேடத்துக்கு ஏற்றபடி மாறுவதில் மட்டுமல்ல, இடத்துக்கு தகுந்தபடி பேசுவதிலும் கெட்டிக்காரர் சூர்யா.

இவர் நடித்த பட‌ங்கள் தமிழில் வெளியாகும் அன்று ஆந்திராவிலும் வெளியாகும். இவரது காக்க காக்க, க‌ஜினி பட‌ங்கள் தமிழ் அளவுக்கு தெலு‌ங்கிலும் ஓடி சாதனை படைத்தது. அதன்பிறகு தமிழில் ஒரு படம் வெளியானால் அதே நாள் அப்படம் தெலு‌ங்கிலும் வெளியாகும்.

அடுத்து வெளியாக இருக்கும் வாரணம் ஆயிரம் தமிழில் வெளியாகும் அதே நாள் ஆந்திராவிலும் வெளியாகிறது. இதற்காக ஹைதராபாத் சென்றிருந்தார் சூர்யா.

அப்போது பத்தி‌ரி‌க்கையாளர்களுக்கு பேட்டியளித்தவர், தமிழ் நாட்டை விட ஆந்திராவில்தான் எனக்கு ரசிகர்கள் அதிகம் என்றார். க‌ஜினி, காக்க காக்க போல் வாரணம் ஆயிரம் படமும் அனைவரையும் கவரும் என்றும் பேட்டியின் போது தெ‌ரிவித்தார் சூர்யா.

Share this Story:

Follow Webdunia tamil