Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாசு பாஸ்க‌ரின் மறுபடியும் ஒரு காதல்!

வாசு பாஸ்க‌ரின் மறுபடியும் ஒரு காதல்!
, வெள்ளி, 10 அக்டோபர் 2008 (16:12 IST)
கனெக்ட் பிலிம் மீடியா, பாலிவுட் சினி புரொட‌க்சன் நிறுவனம் இரண்டும் இணைந்து தயா‌ரிக்கும் படம் மறுபடியும் ஒரு காதல்.

தயா‌ரிப்பாளர்களில் ஒருவரான வாசு பாஸ்கர் கதை, தரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார்.

மலையாள நடிகர் அனிருத் ஹீரோவாக நடிக்கிறார். ஜோஸ்னா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர் வாலி இயக்கிய வடமாலை படத்தில் நாயகியாக நடித்த சரோஜாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதை லண்டனில் ஆரம்பித்து ல‌ண்டனில் முடிவது போல் வித்தியாசமாக அமைத்துள்ளனர்.

படத்தில் இன்னொரு ஹீரோயினாக மலையாள நடிகை வாணி கிஷோர் அறிமுகமாகிறார். லண்டன் தவிர சென்னை, பாண்டிச்சே‌ரியிலும் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil