மோதி விளையாடு படத்தை சரண் இயக்கி வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்தது. வினய் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார் சரண்.
அந்த நேரம் பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியும் அங்கு இருந்திருக்கிறார். தமிழ் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடப்பதை அறிந்த அவர் மோதி விளையாடு ஷூட்டிங் நடந்த இடத்துக்கே வந்துள்ளார்.
படப்பிடிப்பை சிறிது நேரம் வேடிக்கை பார்த்தவர், இந்தி மற்றும் பெங்கால் படங்களை இயக்க சரணுக்கு அழைப்பு விடுத்ததுடன் அவரது மேக்கிங்கையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதில் வினய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.