சென்ற வருடத்தை விட இந்த வருடம் படங்களின் எண்ணிக்கை அதிகம். அதேநேரம் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலையளிக்கும் விஷயம்.
சென்னையின் அடையாளங்களுள் ஒன்றான கெயிட்டி திரையரங்கும் மூடப்பட்டுள்ளது பலரை வருத்தப்பட வைத்துள்ளது.
திரையரங்கை இடிக்காமல் உள்ளேயிருக்கும் நாற்காலிகளை முதற்கட்டமாக அப்புறப்படுத்தியுள்ளனர். ஆறுதலான செய்தி என்னவென்றால் திரையரங்கை ஸ்டுடியோவாக மாற்றியுள்ளனர்.;
சுசி கணேசனின் கந்தசாமி பாடலொன்று இங்கு படமாக்கப்பட்டு வருகிறது. விக்ரம், ஸ்ரேயா இப்பாடல் காட்சியில் நடித்துள்ளனர்.
திரையரங்குகளின் எண்ணிக்கை குறைய மல்டிஃப்ளக்ஸ் திரையரங்குகள் பெருகியதும் ஒரு காரணம் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.