2008-ல் இதுவரை வாய் திறக்கவில்லை தங்கர்பச்சான். முழு கவனமும் புதிய படத்தில். யார் யார் நடிக்கிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ரகசியமாக சேகரித்த தகவல்களில் ஆச்சரியம் டன் கணக்கில்!
இயக்குனராக பிஸியாகிவிட்ட பிரபுதேவா தங்கர்பச்சானின் புதிய படத்தில் நடிக்கிறாராம். உடன் நடிக்கும் இன்னொருவர் பிரகாஷ் ராஜ். கதை நாயகி சந்தியா.
இதில் வியப்பான விஷயம் படத்தில் சந்தியாவுக்கு ஜோடி பிரகாஷ் ராஜாம். அப்படியென்ன கதை என்று கேட்டால் பதிலாக கிடைப்பது மெளனம்.
படப்பிடிப்புக்கு கிளம்பும் முன் எப்படியும் மெளனம் கலைப்பார் தங்கர். புத்தர் சிரித்ததற்கு இணையாக இருக்கும் அந்த நிகழ்வு.