முன்னணி இளம் ஹீரோக்களின் ரீமேக் கனவில் மையமாக இருந்த படம் முரட்டுக் காளை. விஜய், விக்ரம் என முரட்டுக்காளை ரீ -மேக்கில் ஆசைபட்டவர்களின் வரிசை நீளும். ஆனால், காளை அடங்கியது சுந்தர் சிக்கு
உலகம் சுற்றும் வாலிபன் ரீ - மேக்கில் நடிக்க இருக்கும் சுந்தர் சி. முரட்டுக்காளையில் ரஜினி நடித்த வேடத்தில் நடிக்கிறார்.
ஏவிஎம் தயாரித்த முரட்டுக்காளையின் ரீ-மேக் உரிமையை முறைப்படி வாங்கப்பட்டுள்ளது. வாங்கியவர் தயாரிப்பாளர் அமிர்தத்தின் மகன் குணாநிதி. ஹீரோ சுந்தர் சி. என்பது முடிவாகிவிட்டது. விரைவில் பிற நடிகர்கள் யார் என்ற அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.