தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் பாடகராக மட்டுமின்றி, நடிகராகவும் தனது பங்களிப்பை செலுத்தியிருக்கும் எஸ்.பி.பி., முதல் முறையாக மலையாளப் படமொன்றில் நடிக்கிறார்.
முகேஷ், வினித் நடிக்கும் அப்படத்தை அறிமுக இயக்குனர் உண்ணி இயக்குகிறார். படத்தின் பெயர், பறயான் பாக்கி வெச்சது.
இந்தப் படத்தில் கமல் ஹாசன் கெளரவ வேடத்தில் நடிப்பதாக ஒரு தகவல். ஆனால், கமல் தரப்பு இன்னும் இதனை உறுதி செய்யவில்லை.
அடுத்த வருடம் ஜப்பான்-இந்திய கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் மலையாளப் படம் '19 ஸ்டெப்ஸ்'-ல் நடிப்பதை கமல் தரப்பு உறுதி செய்துள்ளது. இதில் களரி பயிற்றுவிக்கும் ஆசானாக நடிக்கிறார் கமல்.