மோசர் பேரின் ராமன் தேடிய சீதை வரும் 19 ஆம் தேதி வெளியாகிறது.
ஜெகன்நாத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை தனது சொந்தப் படத்துக்கு இணையாக எதிர்பார்க்கிறார் சேரன். ஐந்து ஹீரோயின்கள்... தனக்கான துணையைத் தேடும் ஹீரோ! அட, ஆட்டோகிராஃபின் பார்ட் டூ என்று பப்ளிக்கிலும் படத்திற்கு எதிர்பார்ப்பு.
பசுபதி கண் தெரியாத வேடத்தில் நடித்திருப்பதும், வித்யாசாகரின் இசையும் ராமன் தேடிய சீதையின் மீதான எதிர்பார்ப்பு அளவை அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட் ஆகாததால், விநியோகஸ்தர்களும் ராமன் தேடிய சீதையின் ரிசல்டை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.