மறைந்த நடிகர் ரகுவரன். அழகான நடிப்பாலும், கம்பீரமான தோற்றத்தாலும் தமிழ் சினிமாவில் வில்லனாக கொடிகட்டிப் பறந்தவர். அவரின் பல படங்கள் எப்போதும் நம் நெஞ்சைவிட்டு அகலவே அகலாது.
அவரின் திடீர் மரணம் தமிழ் சினிமாவுக்கு மாபெரும் இழப்புதான். மது பழக்கம்தான் அவரை இவ்வளவு சீக்கிரம் நம்மிடமிருந்து பிரித்துவிட்டது.
தன் மரணத்தின் கடைசி நாட்களில் மனைவி ரோகினியையும், தன் ஒரே மகனையும் பிரிந்துதான் வாழ்ந்தார். அவரின் மரணத்துக்குப் பின்னால்... ரோகினி ரகுவரன் பெயரால் ட்ரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து பொதுச் சேவைகள் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.
ரகுவரன் உயிரோடிருந்த காலத்திலும் பல்வேறு உதவிகள் செய்துகொண்டுதான் இருந்திருக்கிறார். ஆனால் விளம்பரப் படுத்திக் கொண்டதில்லை.
அவர் இருந்தபோது என்ன உதவிகள் செய்து கொண்டிருந்தாரோ அதை தொடர்ந்து நான் செய்யப் போகிறேன். அந்த வகையில் முதலில் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களைச் செய்யவிருக்கிறேன் என்கிறார்.
மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் உதவவும் முடிவு செய்திருக்கிறார். அவர் இருந்து செய்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இல்லாமல் செய்வதில் வருத்தம்தான்.