'துள்ளுவதோ இளமை' ஷெரீன் தற்போது பிஸியான நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடப் படங்களிலும் தன் திறமையை காட்டிக் கொண்டிருக்கிறார். மிகவும் கவர்ச்சியாக நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டையெல்லாம் காதிலேயே வாங்குவதில்லை. சினிமா என்பது 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்ற பழமொழிக்கேற்றது. அதைத்தான் நான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன். இளமை இருக்கும் போது நடிக்காமல் எப்போது நடிப்பது என்கிறார்.
மேலும், தற்போது அவர் சொல்வது சரிதான் என்பது போல் லிங்கம் தியேட்டர்ஸ் சார்பாக சஞ்சய்ராம் இயக்கும் படம் 'பூவா தலையா' இதில் ஈஸ்வரி என்கிற பிராமணப் பெண்ணாக நடிக்கிறார். இதில் இடம்பெறும் 'தீக்கோழி... தீக்கோழி... தீக்கோழிடா' என்று ஜான்பீட்டர் போட்ட ட்யூனுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஷெரீன்.
அந்த பாடலுக்காக மூன்று விதமான கெட்டப்புகளில் வந்து அசத்தவிருக்கிறார். காத்து, நெருப்பு, நீர் போன்ற 3 விதமான செட்டும் அசத்தலாக இருக்கும். அத்தோடு வித்தியாசமான ஷெரீனையும் இந்தப் படத்துல பார்க்கலாம் என்கிறார் இயக்குனர். சென்சாரில் கத்திரிக்கோல் சானைப் பிடிக்கும் சத்தம் எங்கோ கேட்கிறது. வெட்டாமல் இருந்தால் சரிதான்.