பிரபலமான வில்லன் நடிகர் பாபு ஆண்டனி. தமிழ்ப் படங்களில் சில ஆண்டுகள் தலைகாட்டாமல் தெலுங்கு, கன்னடம் என்று பிஸியாக இருந்தவர், தற்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
அதுவும் வில்லனாக இல்லை ஹீரோவாக. இவர் பல தமிழ்ப் படங்களில் நடித்தாலும், சத்யராஜ் நடித்த பூவிழி வாசலிலே படத்தில் வில்லனாக நடித்த பின்தான் பரவலாக அறியப்பட்டார்.
இவர் தற்போது தமிழில் நடிக்கும் படம் 'வில்லாளன்'. இப்படத்தை அமர்கிருஷ்ணா சினி லிங்க்ஸ் சார்பாக ராஜசேகரன் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தில் துரோணாச்சாரியார் வேடத்தில் மொட்டையடித்துக் கொண்டு வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக ஸ்ரீ நடிக்கிறார். இப்படம் ஏற்கனவே மலையாளத்தில் எடுக்கப்பட்டது. சின்னச் சின்ன மாற்றங்களுடன் தற்போது தமிழில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படம் மூலம் ஒரு ஆஜானுபாகுவான துரோணாச்சாரியாரைப் பார்க்கலாம்.