Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாமனன் தொடக்க விழா!

Advertiesment
வாமனன் தொடக்க விழா!
, வியாழன், 11 செப்டம்பர் 2008 (19:45 IST)
சுப்ரமணியபுரம் ஜெய் நடிக்கும் வாமனன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

இன்றைய தேதியில் கோடம்பாக்கத்தின் ஹாட் கேக், ஜெய்! ஐந்து லட்சம் வாங்கிக் கொண்டிருந்தவரின் இப்போதைய சம்பளம் ஐம்பது லட்சம். அவர் கேட்காமலே தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு அரை கோடிக்கு சம்பளத்தை உயர்த்தியிருப்பதுதான் ஆச்சரியம்.

இயக்குனர் கதிரிடம் உதவியாளராக இருந்த அஹமத் இயக்கும் வாமனனில் நடிக்கிறார் ஜெய். சென்னையைச் சேர்ந்த மாடல், ப்ரியா ஆனந்த் ஹீரோயின். ட்ரீம் வேலி கார்ப்பரேஷன் தயாரிப்பு.

நேற்று சென்னை கிருஷ்ணவேணி ஹவுஸில் இதன் தொடக்க விழா எளிமையாக நடந்தது. ஜெய், ப்ரியா ஆனந்த், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, தயாரிப்பாளர், இயக்குனர் அஹமத் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்னொரு ஹீரோயினாக லட்சுமிராய் நடிக்கிறார். ஊர்வசி, சந்தானம் ஆகியோரும் உண்டு.

சென்னை, கோயம்புத்தூர் சாலக்குடி பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. பாடல் காட்சிகளுக்கு சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, நியூ ஜெர்ஸி ஆகிய வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil