டாக்டர் ராஜசேகருக்குப் பிறகு சினிமாவிற்கு வந்திருக்கும் அதிரடி மருத்துவர் ராம். இவர் ஹீரோவாக நடித்து வரும் படம் பிரம்மதேவா. முமைத்கான், தேஜா ஸ்ரீ இருவரும்தான் பிரதான நடிகைகள்.
சைக்கோ என்பது கொடூரமல்ல, குணப்படுத்தக் கூடியது என்ற மருத்துவ உண்மையை அடிப்படையாக வைத்துத் தயாராகிறது பிரம்மதேவா. இரண்டரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து விடுவாரோ டாக்டர் என்று பயப்பட வேண்டாம். ஆக்சன் காட்சியில் பின்னியிருக்கிறாராம் டாக்டர்.
குறிப்பாகச் சென்னை அண்ணா சாலையில் உள்ள பத்து மாடிக் கட்டடத்தில் இருந்து குதிப்பதாக காட்சி. டூப் போடாமல் ராமே குதித்து, யூனிட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார். படத்தில் கார் சேஸிங் ஒன்றும் இருக்கிறது. ஆக்சன் டாக்டர்!