சினிமாவில் கூப்பிடுவார்கள் என இவ்வளவு நாள் காத்திருந்தார். யாரும் சங்கவி பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. சரிதான் நீங்களுமாச்சு, உங்க சினிமாவுமாச்சு என்று சின்ன திரைக்குக் கால்ஷீட் கொடுத்துள்ளார். ஆம் வெள்ளித்திரை சங்கவியை சின்னத்திரை சுவீகரித்துக் கொண்டுள்ளது.
சி.ஜே.பாஸ்கர் இயக்கும் கோகுலத்தில் சீதை நெடுந்தொடரில் சங்கவிதான் நாயகி. கேட்ட சம்பளத்தைக் கை நிறையக் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
விஜய்யுடனெல்லாம் நடித்தவர் சினிமாவிலிருந்து தேய்ந்து சின்னத் திரைக்கு வந்ததில் கொஞ்சம் கூச்சம். அதுவாகத் தெரியும் வரை நாமாக எதுவும் சொல்ல வேண்டாம் என்று சின்னத் திரை பிரவேசத்தை மறைத்தே வைத்துள்ளார் சங்கவி.
காய் முற்றினால் கடைத் தெருவிற்கு வந்துதான் ஆக வேண்டும் என்ற சங்கதி சங்கவிக்குத் தெரியாதா?