சின்ன அசின் போலிருக்கிறார் என்று 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்யிடமிருந்து பாராட்டும் பெற்றவர் பூர்ணா. புதிய கேரள வரவு.
தமிழில் முதலில் ஒப்பந்தமானது கொடைக்கானல் படம் என்றாலும், வெளி வந்த முதல் படம் முனியாண்டி.
விஜய் பாராட்டியதாலோ தெரியவில்லை, யார் மாதிரி வரவேண்டும் என்று கேட்டால், என் வழி அசின் வழி என்கிறார் தயக்கமின்றி.
பிற மலையாள நடிகைகள் போல் இல்லாமல், மலையாள சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் பூர்ணா. பாசிலின் புதிய படத்தில் இவர்தான் நாயகி.
மோகன்லாலின் மூன்று படங்களில் பூர்ணா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.