மனதை வருடும் மெலடிக்கு வித்யாசாகர்! காதுள்ள அனைவருக்கும் இந்த சேதி தெரியும். ராமன் தேடிய சீதையில் இவர் போட்டிருக்கும் மெலடிகள் ஒவ்வொன்றும் காதில் தேன் பாயும் ரகம்.
இந்தப் படத்தில் வேறொரு இசைப் புரட்சியும் செய்துள்ளார் வித்யாசாகர். விஞ்ஞானம் வளர்ந்த பிறகு, ஐம்பது, நூறு இசைக்கலைஞர்களை வைத்து யாரும் பாடல் பதிவு செய்வதில்லை. நூறுபேர் செய்யக்கூடிய வேலையை ஹைடெக் கீ-போர்ட் தனியாக செய்து விடும். ஆனாலும் மிஷின் மிஷின்தானே!
ராமன் தேடிய சீதையில் நூற்றுக்கு மேற்பட்ட இசைக்கலைஞர்களை வைத்து லைவ்வாக பாடல் பதிவை நடத்தினார் வித்யாசாகர். படத்தின் பின்னணி இசைக்கும் இதே முறையை பின்பற்றியிருக்கிறாராம்.
காதுக்கு இனிய செய்தி என்பது இதுதானோ!