லேகா ரத்னகுமார்! விளம்பர உலகில் பிரபலமான பெயர். கணக்கில்லாத விளம்பரப் படங்கள். ஏழு தொலைக்காட்சி தொடர்கள் இயக்கியவர். முதன் முறையாக முழுநீள திரைப்படம் ஒன்றை இயக்குகிறார்.
இவரது படத்தில் நாயகியாக நடிக்கயிருப்பது மேகாராஜ். பெயரை அறியாதவர்களுக்கும் ஆளை தெரியும். கோக், குவாலிட்டி ஐஸ்கிரீம், பஜாஜ், டாடா உப்பு... இவையெல்லாம் மேகாராஜ் நடித்த விளம்பரப் படங்களில் சில பி.காம். பட்டதாரி. மும்பை பூர்வீகம். அப்பா போஜ்புரி படங்களைத் தயாரிப்பவர்.
என்னுடைய உலகம் விளம்பரம் என்று அப்பாவுக்கே டாட்டா சொன்னவரை கதை சொல்லி கவிழ்த்திருக்கிறார் லேகா ரத்னகுமார்.
ம்... படைப்பாற்றல் உள்ளவர்தான்!