சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் ரசிக்கும் சீமானே படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. ஸ்ரீகாந்த், நவ்யா நாயர் நடித்திருக்கும் இப்படத்தின் பழைய பெயர் எட்டப்பன்.
நந்து என்ற கேரக்டரில் அடுத்தவரை ஏமாற்றி பிழைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் ஸ்ரீகாந்த்.
இந்த கதையும் எட்டப்பன் என்ற பெயரும் எங்கள் வம்சத்தின் கவுரத்தை களங்கப்படுத்துகிறது என எட்ட்டப்பன் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர பெயரை ரசிக்கும் சீமானே என மாற்றினார் படத்தின் இயக்குனர் வித்யாதரன்.
முதல் ஆடியோவை இயக்குனர் பேரரசு வெளியிட ஜனநாதன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியை வித்யாதரன் தொகுத்து வழங்கினார்.
ரசிக்கும் சீமானேவுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனியும் விழாவில் கலந்து கொண்டார்.