Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த என் இலக்கு இந்திப் பட உலகம்!

அடுத்த என் இலக்கு இந்திப் பட உலகம்!
, புதன், 20 ஆகஸ்ட் 2008 (20:19 IST)
தாணு தயாரிப்பில் வளர்ந்துவரும் பிரமாண்டமான படம் 'கந்தசாமி'. இயக்குனர் சுசிகணேசன் இயக்க விக்ரம் நடிக்கிறார். பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து இந்திப் பட உலகில் இறங்க இருக்கிறார் விக்ரம். மணிரத்னம் இயக்கும் இந்திப் படத்தில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கவுள்ளனர். அந்தப் படத்தில்தான் விக்ரம் முக்கியமான அதாவது அபிஷேக் பச்சனுக்கு இணையான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

அதே படத்தை தமிழிலும் இயக்கவிருக்கிறார் மணிரத்னம். அதில் ஹீரோவாக, ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கிறார். தமிழில் ஹீரோவாக நடித்துவிட்டு, இந்தியில் முதன் முதலில் நடிக்கும் படத்தில் ஹீரோயில்லாமல் வேறு கேரக்டரில் நடிப்பது பற்றி கொஞ்சம் கூட தனக்கு கவலை இல்லை என்கிறார் விக்ரம்.

மிகப்பெரிய இயக்குனர் மணிரத்னம், மிகப்பெரிய ஹீரோ அபிஷேக் பச்சன். அதேபோல உலக அழகியும், அமிதாப் பச்சனின் மருமகள். இப்படி மூன்று சிறப்புகளும் கொண்டுள்ள படத்தில் நடிப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது என்கிறார். 'கந்தசாமி' கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. நினைத்தபடி படத்தை எடுத்து வருகிறார் இயக்குனர்.

அதேபோல, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை படம் நன்றாக வரவேண்டுமென்று அதிக பட்ஜெட் செலவு செய்து தயாரித்து வரு‌கிறார் தாணு. அத்தோடு... அடுத்த மாதம் தன் மகன் இயக்கும் சக்கரக்கட்டி படமும், அதற்கடுத்து தீபாவளிக்கு கந்தசாமியும் ரிலீஸாக உள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil