தமிழில் 'பூவே பூச்சூடவா' படத்தில் அறிமுகமான நதியா... பல படங்களில் நாயகியாக நடித்தார். அவரின் வருகை அன்றைய பல கதாநாயகிகளை கலக்கத்தில் ஆழ்த்தியது.
நல்ல பீக்கில் இருந்தபோதே அமெரிக்க தொழில் அதிபரைத் திருமணம் செய்துகொண்டு லட்சக்கணக்கான அவரது ரசிகர்களின் இதயத்தில் குண்டு வைத்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி அமைதியாக குடும்பம் நடத்திக்கொண்டு இருந்தார்.
பன் நீண்ட இடைவெளிக்குப் பின் ஜெயம் ரவியின் அம்மாவாக எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நடித்தார். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் இளமையான அம்மாவாகவே இருந்தார். அந்தப் படத்தில் அவர் மிகப்பெரிய பிளஸ்ஸாக இருந்ததால் படம் வெற்றி பெற்றது.
அதற்குப்பின் அம்மா வேடத்திற்கும், அத்தை கேரக்டருக்கும் நடிக்க அழைப்பதற்காக பல தயாரிப்பாளர்கள் மொய்க்க ஆரம்பித்ததோடு கேட்ட சம்பளம் கொடுக்கவும் சம்மதித்தார்கள்.
அதிக படங்களும் ஒப்புக்கொண்டு அமெரிக்காவிலிருந்து மும்பைக்கு வந்து செட்டிலாகி நடித்துக் கொண்டிருக்க, அவருடைய கணவர் குழந்தைகளைக் கூட கவனிக்க முடியாமல் நடிப்பு... நடிப்பு என்று செல்வதால், இனி நடிக்கக் கூடாது, குடும்பத்தைக் கவனி என்று கணவர் கடுப்புடன் கண்டிஷன் போட, தற்போது என்ன செய்வது தவித்துக் கொண்டிருக்கிறார் இளமை அம்மா நதியா.