கல்யாண மோதிரத்தை கழற்றிய பிறகு பழைய களை மீரா வாசுதேவன் முகத்தில் திரும்பியிருக்கிறது. இனி திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பவர், மூன்று மொழிகளில் பிஸி.
தமிழில் மட்டும் இரண்டு படங்களில் நடிக்கிறார் மீரா வாசுதேவன். அதில் கத்திக்கப்பல் முடிந்துவிட்டது. தந்தையை கொன்றவர்களை பழிவாங்கும் மகளாக இதில் நடித்துளார் மீரா.
இன்னொரு படம் 'நீயே!'. இதில் கலெக்டராக நடிக்கிறார். மீரா வாசுதேவன் இதுவரை ஏற்காத வேடமாம் இது. சமீபத்தில் மீரா வாசுதேவன் நடித்த இந்திப் படத்தைப் பார்த்த அமிதாப் பச்சன் மீராவின் நடிப்பை பாராட்டினாராம். இன்னும் அந்த பரவசம் மீராவின் குரலில் மிச்சமிருக்கிறது.