சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் 2.19 கோடிகள் வசூலித்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குசேலன்.
ரஜினி படங்களுக்குரிய வசூல் குசேலனுக்கு இல்லை என்பதையே சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. முதல் வாரம் 80 லட்சத்திற்கு மேல் வசூலித்த இப்படம் இரண்டாம் வாரத்திலேயே 56 லட்சங்களுக்கு கீழிறங்கியுள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் தசாவதாரம். இதன் சென்ற வார இறுதி வசூல் ஏறக்குறைய 12 லட்சங்கள். சுப்ரமணியபுரத்திற்கு ஏழரை லட்சங்கள்.
தசாவதாரம் சென்ற வார இறுதி வரை சென்னையில் வசூல் செய்தது 10.36 கோடி! இந்த வசூலை குசேலன் எட்டுவது கடினம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.