சும்மா இருந்தாலும் சிம்புவை பற்றி நூறு செய்திகள். ஒவ்வொன்றும் தலைப்புச் செய்தியின் கனம்.
இணையதளங்களிலும், எம்.எம்.எஸ்.களிலும் பரவும் நயன்தாராவின் (போலி) ஆபாசப் படங்களுக்கு சிம்புவே காரணம். நீதிமன்றம், வழக்கு என்று போனால் வீண் சிரமம். அதனால், தேசிய மனித உரிமை ஆணையத்திடம் சிம்பு மீது புகார் தர ஆலோசனை நடத்தி வருகிறார் நயன்தாரா என்று யாரோ கொளுத்திப் போட்டனர்.
இது ஒருபுறமிருக்க, வரப்போகும் நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போகிறாராம் சிம்பு. சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான இவர் சங்க செயல்பாடுகளில் சுறுசுறுப்பு காட்டும் ஒரே இளம் நடிகரும் கூட.
அடிக்கடி தன் மீது புகார் வருவதால் ஒரு பிடிமானத்திற்காக சிம்புவுக்கு தோன்றிய ஐடியாதானாம், நடிகர் சங்கத் தேர்தல் பதவி. அதுமட்டும் இருந்தால் பிரச்சனைகளை பனியாக ஓடச் செய்யலாம் என்பது அவரது எண்ணமாம்.
முதல்வர் பதவிக்கு குறிவைக்காமல் போனாரே, அதுவரையில் நிம்மதி!