மீண்டும் ஒரு ஹீரோயினை வைத்து படமெடுப்பதே யானையை கட்டி தீனி போடும் வேலை. படத்துக்கு ஆறு பேர் என்றால்,,,?
ராஜாதிராஜாவில் ஆறு ஹீரோயின்களை பயன்படுத்துகிறார் ஷக்தி சிதம்பரம். ஆளுக்கு நாலுசீன் என்றாலும் பதினாலு ரீல் நிறைந்து விடும். பிறகெப்படி கதை சொல்வார்கள்?
ஷக்தி சிதம்பரத்தை தொடர்ந்து செல்வாவும் ஆறு ஹீரோயின் மேனியாவுக்கு ஆட்பட்டிருக்கிறார். குரு என் ஆளு படத்தை முடித்து விட்டவர் அடுத்து நூற்றுக்கு நூறு படத்தின் ரீ-மேக்கை இயக்குகிறார். செல்வா இயக்கிய கடந்த இரு படங்களும்- நான் அவன் இல்லை, குரு என் ஆளு- ரீ-மேக் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நூற்றுக்கு நூறு ரீ-மேக்கில் வினய் ஹீரோ. அவருக்கு ஜோடி ஆறு பேர். இரண்டாம் வரிசை நடிகைகளுக்கு வலை வீசப்பட்டுள்ளது. சிக்கியவர்களுக்கு லக்கி பிரைஸ் நிச்சயம்!