குருவியைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சூர்யா நடிக்கும் படத்தை தயாரிப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று கூறுகிறது.
விஜயை அடுத்து விஷாலை வைத்து உதயநிதி படம் தயாரிப்பதாக சொல்லப்பட்டது. விஷால் சொந்தமாக படம் இயக்குவதிலும், நண்பர் பிருத்வியின் இயக்கத்தில் இரண்டு வேடத்தில் நடிக்க உள்ள படத்திலும் கவனம் செலுத்துகிறார். அதனால் உதயநிதி தனது பார்வையை சூர்யா பக்கம் திருப்பியதாக கூறப்படுகிறது.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அயனில் நடித்துவரும் சூர்யாவின் அடுத்தப் படமாக இது இருக்குமாம். இயக்கம் கே.எஸ். ரவிக்குமார். குருவியில் கடைசி நிமிடத்தில் கழற்றி விடப்பட்ட நயன்தாரா ஹீரோயின்.
விரைவில் ரெட் ஜெயண்டிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்!