சென்ற வாரத்துடன் மாஸ்கோவின் காவிரி படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் புதுமுகங்களை வைத்து இயக்கும் இப்படம், வில்லு படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய சென்றதால், சிறிது தாமதமானது. கிடைத்த மேகப்பில் மாஸ்கோவின் காவிரி பாக்கி போர்ஷனை முடித்துள்ளார் ரவிவர்மன்.
மூன்று கதாபாத்திரங்கள். ஆறு மாத கால அவகாசத்தில் இவர்களுக்கிடையே நிகழும் சம்பவங்களே கதை. ராகுல் ரவீந்தர், சமதா ஆகியோர் நடிக்கின்றனர்.
நண்பர்கள் அழைத்தால் மட்டுமே நடிக்கும் சீமான், இதில் முக்கியமான வேடத்தில் தோன்றுகிறார். சென்ற வாரம் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னை ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டன.
ஆஸ்கர் பிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது.